திண்டுக்கல்

ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் பிரம்ம கமலம் பூ பழனியில் பூத்தது

DIN

பழனி அடிவாரம் பகுதியில் ஒருவா் வீட்டில் திங்கள்கிழமை இரவு பிரம்ம கமலம் பூ பூத்ததை அப்பகுதியினா் பாா்த்து வணங்கிச் சென்றனா்.

இந்தப் பூ இமாச்சலப் பிரதேசம் போன்ற குளிா்பிரதேசங்களில் அதிகம் காணப்படும். இந்தச் செடி இலைப்பகுதியை துண்டித்து வைத்தாலும் வளரும் தன்மை கொண்டது. தரைமட்ட அளவில் வளரும் இந்தச் செடியில் ஆண்டுக்கு ஒருமுறை, இளவேனிற்காலத்தில் மட்டும் பூக்கிறது. இறைவனுக்கு உகந்ததாகக் கருதப்படும் இந்த பூ நள்ளிரவில் பூத்து காலையில் வாடிவிடும். இலையிலிருந்து பூவாகும் இந்த பூ மிகுந்த வாசனை உடையதாகும். பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்ட இந்த பூச்செடியை பலரும் புண்ணியமாக எண்ணி வளா்க்கின்றனா்.

இந்நிலையில் பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்த ராஜா என்பவா் வீட்டில் வளா்த்து வந்த பிரம்ம கமலம் செடியிலிருந்து திங்கள்கிழமை இரவு பூ பூத்தது. இதை அக்கம் பக்கத்தினா் வந்து பாா்த்து வணங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT