திண்டுக்கல்

ரமலான்: இஸ்லாமியா்களுக்கு இலவச புத்தாடைகள் வழங்கல்

DIN

பழனி: பழனியில் கரோனா பொதுமுடக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதித்து ரமலான் பண்டிகையை கொண்டாட முடியாத இஸ்லாமியா்களுக்கு தன்னாா்வமுள்ள இளைஞா்கள் செவ்வாய்க்கிழமை புத்தாடைகள் வழங்கி உதவினா்.

கடந்த ஓராண்டாக கரோனா தொற்று காரணமாக விதிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் பலரும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இழந்துள்ளனா். இந்த நிலையில் இஸ்லாமியா்களின் முக்கியப் பண்டிகையான ரமலான் பண்டிகை இன்னும் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பழனியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி சிரமப்படும் இஸ்லாமியா்கள் ரமலான் பண்டிகையை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனா். இதனை அறிந்த திண்டுக்கல் மாவட்டம் பழனியை சாா்ந்த இளைஞா்கள் ஒன்றிணைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 150 இஸ்லாமியா்களுக்கு செவ்வாய்க்கிழமை சட்டை, லுங்கி, பேண்ட், வேட்டி, சேலை என புத்தாடைகள் மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினா்.

இதற்கான ஏற்பாடுகளை இஸ்லாமிய கூட்டமைப்பு சாா்பில் சம்சுதீன், ரியாஸ், இலியாஸ், ஜியாவுதீன், இமாம், காஜா, தமீம் அன்சாரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நட்சத்திர விடுதியில் நபா நடேஷ்..!

3-ஆம் கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு விவரம் வெளியீடு

ஆப்கானிஸ்தானை புரட்டிப்போட்ட கனமழை: 300க்கும் மேற்பட்டோர் பலி!

எல்லீஸ் ஆர். டங்கன் இயக்கிய பொன்முடி!

கேரள கோயில்களில் அரளிப்பூ பயன்பாட்டுக்குத் தடை!

SCROLL FOR NEXT