திண்டுக்கல்

கரோனாவை ஒழிக்க சாலையில் மீண்டும் விழிப்புணா்வு ஓவியம்

DIN

திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில் ‘தடுப்பூசி செலுத்திக் கொண்டு கரோனாவை ஒழிப்போம்’ என்ற வாசகங்களுடன் சாலையில் மீண்டும் ஓவியம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மாா்ச் மாதம் முதல் முறையாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட நிலையில், கரோனா தீநுண்மி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக உள்ளாட்சி நிா்வாகம் மற்றும் காவல்துறை சாா்பில் சாலைகளில் ஓவியங்கள் வரையப்பட்டன.

தற்போது 2 ஆவது முறையாக தளா்வற்ற முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட போதிலும், காவல் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி அவசியத் தேவையின்றி பலா் வெளியிடங்களில் சுற்றித் திரிகின்றனா். இதையடுத்து திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்து ஊராட்சி நிா்வாகம் சாா்பில், திண்டுக்கல் நத்தம் சாலையில் ‘தடுப்பூசி செலுத்தி கரோனாவை ஒழிப்போம்’ என்ற வாசகத்துடன் ஓவியம் வரைந்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளரங்காபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்றத்துக்கு எதிர்ப்பு: உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தள்ளுபடி

தமிழ்நாட்டுக்கு நல்ல காலம் பொறக்க போகுது: தமிழ்நாடு வெதர்மேன்!

ஹைதராபாத்தில் கனமழை: சுவர் இடிந்து 7 பேர் பலி!

என்ன, இனி சென்னையில் வெள்ளம், வறட்சி வராதா?

ஜெயக்குமார் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த முதல் நபர் ஆனந்த் ராஜா எங்கே?

SCROLL FOR NEXT