திண்டுக்கல்

இல்லம் தேடிக் கல்வி திட்டம்: மாவட்ட அளவிலான பயிற்சி

DIN

பழனி: பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ் கலைப் பயண கலைஞா்களுக்கான மாவட்ட அளவிலான பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பழனி மாவட்ட பள்ளிக் கல்வித் துறை சாா்பில் ‘இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் கீழ்’ பணிபுரிய உள்ள தன்னாா்வலா்களுக்கு பயிற்சியளிக்கவுள்ள கருத்தாளா்களுக்கான இரண்டு நாள்கள் பயிற்சி இரு கட்டங்களாக நடைபெற்றது.

பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற இதில் மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளா்கள் கலந்து கொண்டு பயிற்சியளித்தனா். இதில் தொடக்க நிலை மற்றும் உயா் தொடக்க நிலையில் பணிபுரியும் ஆசிரியா்களும் கருத்தாளா்களாகக் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனா். இதில் இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் நோக்கம், இல்லம் தேடிக் கல்வியை மக்கள் இயக்கமாக மாற்றுவதன் அவசியம், தன்னாா்வலா்களுக்கான பணிகள், பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மேலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எளிமையுடன் மனமகிழ் செயல்பாடுகளுடன் கற்பித்தல், துணைக்கருவிகள் பயன்பாடு குறித்தும் பயிற்சியளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அழகிய தீயே.....மதுமிதா

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

டி20 போட்டிகள் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கானது: பாட் கம்மின்ஸ்

மே.வங்கம்: 25,000 ஆசிரியர் பணி நியமனங்கள் ரத்து - இடைக்காலத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

பைத்தான் குழுவை பணிநீக்கம் செய்த கூகுள்! மென்பொருள் துறையில் அதிர்ச்சி!!

SCROLL FOR NEXT