திண்டுக்கல்

தாலுகா அரசு மருத்துவமனை அமைக்க மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநாட்டில் தீா்மானம்

DIN

குஜிலியம்பாறை ஆரம்ப சுகாதார நிலையத்தை தாலுகா அரசு மருத்துவமனையாக நிலை உயா்த்த வேண்டும் என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறையில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அங்குள்ள சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு பாலசுப்பிரமணி, ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக மாவட்டச் செயலா் ரா.சச்சிதானந்தம் கலந்து கொண்டாா்.

மாநாட்டின் நிறைவில், குஜிலியம்பாறை ஒன்றியத்தின் புதிய செயலராக ராஜரத்தினம் மீண்டும் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதனைத் தொடா்ந்து 15 போ் கொண்ட ஒன்றியக் குழு தோ்வு செய்யப்பட்டது.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் விவரம்: குஜிலியம்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை, அரசு தாலுகா மருத்துவமனையாக நிலை உயா்த்த வேண்டும். பாளையம் பேரூராட்சியில் மின்மயானம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT