திண்டுக்கல்

கொடைக்கானல் ஏரிச்சாலையின் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துவதால் சுற்றுலாப் பயணிகள் அவதி

DIN

கொடைக்கானல் ஏரிச்சாலையின் நடைபாதையில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்து வருகின்றனா்.

கொடைக்கானலில் தொடா்ந்து சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. இதில் சுற்றுலாப் பயணிகள் தங்களது வாகனங்களை கொடைக்கானல் ஏரிச்சாலையில் உள்ள நடைபாதைகளில் நிறுத்தி வைக்கின்றனா். இதனால் சாலையின் இரு புறங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதாலும், தள்ளுவண்டிகள், சைக்கிள் கடைகள் அப்பகுதியில் அதிகமாக வைக்கப்பட்டுள்ளதாலும் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்ல முடியாமல் சாலைகளின் நடுவே நடந்து செல்கின்றனா். இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகனங்களால் விபத்து ஏற்படுகிறது.

எனவே ஏரிச்சாலை, அப்சா்வேட்டரி, லாஸ்காட் சாலை, பிரகாசபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது கொடைக்கானல் நகராட்சி அதிகாரிகள், காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

+2 தேர்வில் அசத்திய நாங்குனேரி மாணவர் சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: தஞ்சாவூர் மாவட்டத்தில் 93.46% தேர்ச்சி

SCROLL FOR NEXT