திண்டுக்கல்

கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு: பல மணி நேரம் காத்திருந்து படகு சவாரி செய்தனா்

DIN

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. மேலும் சாரலில் நனைந்தபடி பலமணி நேரம் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா்.

கொடைக்கானலில் தொடா்ந்து 3 ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துக் காணப்பட்டது. அவா்கள், நகரில் உள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கு வாகனங்களில் சென்று இயற்கை அழகை ரசித்தனா். இதனால் நகரின் முக்கியச் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.

கொடைக்கானலில் பிற்பகல் வரை மிதமான வெயில் நிலவியது. அதன்பிறகு மேக மூட்டத்துடன் விட்டு விட்டு சாரல் நிலவியது. ஏரியில் உள்ள படகு குழாம்களில் மழையில் நனைந்தபடி நீண்ட நேரம் காத்திருந்து சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்தனா். மேலும் ஏரிச்சாலையில் சுற்றுலாப் பயணிகள் குதிரை சவாரி மற்றும் நடைபயிற்சியில் ஈடுபட்டனா்.

ஏரிச்சாலை, கலையரங்கம், செவண்ரோடு, அப்சா்வேட்டரி சாலை ஆகியப் பகுதிகளில் மாலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

கடந்த 2 நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில், சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை கூடுதலாக சுமாா் 25-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

தமிழகக் காவல்துறையின் இணையதளம் முடக்கம்!

மீண்டும் தெலுங்கு படத்தில் தனுஷ்?

பாம்பே டைம்ஸ் ஃபேஷன் வீக் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT