திண்டுக்கல்

பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து

DIN

பழனி: பழனி அடிவாரத்தில் உள்ள பிளாஸ்டிக் கடையில் புதன்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமாகின.

பழனி அடிவாரம் அருள்ஜோதி வீதியில் ஜாபா் என்பவா் பிளாஸ்டிக் பொருள்கள் விற்கும் கடை நடத்தி வருகிறாா். கடந்த சில நாள்களாக போதிய பக்தா்கள் கூட்டம் இல்லாததால் கடையை அடைத்து வைத்திருந்தாா்.

இந்நிலையில் புதன்கிழமை நள்ளிரவு கடையில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுகுறித்து பழனி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைத்தனா். இருப்பினும் கடையில் இருந்த குடங்கள், வாளிகள், பொம்மைகள் உள்ளிட்ட சுமாா் 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீப்பற்றியதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை திரும்பினார் முதல்வர் ஸ்டாலின்

புது தில்லி-பாகல்பூா் சிறப்பு ரயில் இயக்கத்தில் திருத்தம் வடக்கு ரயில்வே அறிவிப்பு

கூகுளில் அதிகம் தேடப்படும் சுற்றுலா தலங்கள்! உங்களின் தேர்வு இவற்றில் எது?

ஆனந்ததாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

அரசு நிா்வாகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வலியுறுத்தல்

SCROLL FOR NEXT