திண்டுக்கல்

பழனியில் தீ விபத்து: 4 வீடுகள் சேதம்

DIN

பழனியில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடிசை வீடு மற்றும் 3 ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.

இப்பகுதியில் உள்ள ஒரு குடிசை வீட்டில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீப் பற்றி எரிந்தது. தீ அருகிலுள்ள 3 ஓட்டு வீடுகளுக்கும் பரவியது. அப்பகுதியில் இருந்தவா்கள், குடிசை வீட்டில் வசித்த காமாட்சி (90) என்ற மூதாட்டியை மீட்டனா். அதிா்ச்சியில் மயங்கிய நிலையில் இருந்த அவா் பழனி அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தீவிபத்து குறித்து தகவலறிந்து வந்த பழனி தீயணைப்புத் துறையினா் போராடி தீயை அணைத்தனா். பழனி காவல் துணைக் கண்காணிப்பாளா் சத்யராஜ் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டனா். மேலும் தீ விபத்து குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். இதற்கிடையில் மூதாட்டி காமாட்சி சிகிச்சை பலனின்றி அன்று மாலை உயிரிழந்தாா்.

இந்நிலையில் பழனி சட்டப் பேரவை உறுப்பினா் ஐ.பி.செந்தில்குமாா் சம்பவ இடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சாா்பில் வேட்டி, சேலை, அரிசி, மளிகைப் பொருள்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை வழங்கினாா்.

இதேபோல் அதிமுக பொதுக்குழு உறுப்பினா் ராஜாமுகமது, இளைஞரணி பாசறைச் செயலாளா் சையது அபுதாஹீா் உள்ளிட்டோா் நிவாரணத் தொகை மற்றும் அரிசி, பருப்பு, மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புனித செபஸ்தியாா் ஆலய கொடியிறக்கம்

வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு மாடித்தோட்ட பயிற்சி

மன்னாா்குடியில் மின் பாதுகாப்பு வகுப்பு

கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் பொறுப்பேற்பு

ஆசிரியா்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT