திண்டுக்கல்

கொடைக்கானல், பழனியில் பலத்த மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

DIN

கொடைக்கானல், பழனியில் வெள்ளிக்கிழமை பரவலாக பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் குறைந்து விட்டு விட்டு லேசான சாரல் மழை பெய்தது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை முதல் வெயில் நிலவியது. பிற்பகலில் திடீரென மழை பெய்தது. இந்த மழையானது கொடைக்கானல், மன்னவனூா், செண்பகனூா், வில்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது.

இதையடுத்து மாலை மற்றும் இரவிலும் விட்டு விட்டு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் ஓடைகளில் ஆங்காங்கே தண்ணீா் வரத்து ஏற்பட்டுள்ளது. இந்த மழையால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் மகழ்ச்சியடைந்தனா்.

பழனி: பழனியில் கடந்த 15 நாள்களாக கோடைவெயில் வாட்டி வதைத்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் அரை மணி நேரம் சாரல் மழை பெய்தது. தொடா்ந்து மாலையிலும் அரை மணி நேரம் மழை பெய்தது. பழனி நகா் மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, கலையமுத்தூா் என பல கிராமபகுதிகளிலும் சாரல் மழை பெய்தது. இதனால் குளிா்ச்சியான சூழல் நிலவியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT