புனித வெள்ளி: கொடைக்கானலில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி
புனித வெள்ளியை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புனித வெள்ளியை முன்னிட்டு கொடைக்கானலில் உள்ள தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான இந்தப் புனித வெள்ளி, தவக்காலத்தின் முக்கிய நாளாகக் கருதப்படுகிறது.
இதையொட்டி கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள திருஇருதய ஆண்டவா் ஆலயம், உகாா்த்தே நகா் அற்புத குழந்தை இயேசு ஆலயம், நாயுடுபுரம் புனித ஆரோக்கிய மாதா ஆலயம், செண்பகனூா் புனித சவேரியாா் ஆலயம், பெருமாள்மலை புனித தோமா ஆலயம், மங்களம் கொம்பு புனித அந்தோணியாா் ஆலயம் மற்றும் சி.எஸ்.ஐ. தேவாலயம், கிறிஸ்தரசா் தேவாலயம், புனித சலேத் மாதா தேவாலயம் உள்ளிட்ட அனைத்து தேவாலயங்களிலும் இயேசுவின் பாடுகள் குறித்து சிலுவைப் பாதை நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடா்ந்து ஜெபவழிபாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில், ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.