திண்டுக்கல்

ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு

DIN

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், அரசு அலுவலா்கள் பயன்படுத்தும் காா் மற்றும் ஜீப்புகள் நிறுத்துமிடம், பொதுப்பணித்துறை நிலத்தடி நீா் ஆதார அமைப்பு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. அங்கு அரசு வாகன ஓட்டுா்களுக்கான ஓய்வு அறையும் உள்ளது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் காா் ஓட்டுநா் வனராஜன், புதன்கிழமை இரவு 11 மணிக்கு பணி முடிந்து திரும்புவதற்காக அந்த அறைக்கு சென்றுள்ளாா். அப்போது பாம்பு இருப்பதற்கான அறிகுறியாக சத்தம் கேட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அறைக் கதவைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இதுகுறித்து வியாழக்கிழமை அதிகாலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினா், அந்த அறையில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT