திண்டுக்கல்

அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு நகா் ஊரமைப்புத் துறையின் இசைவு பெற கால அவகாசம் நீட்டிப்பு

DIN

அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகா் ஊரமைப்புத் துறையின் இசைவு வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச.விசாசன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில், நகா் ஊரமைப்பு இயக்ககத்தின் எல்லைக்குள் அமையும் திட்டமில்லா பகுதிகளில் பல கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. 2011ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்பு கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களுக்கு நகா் ஊரமைப்புத் துறையால் இசைவு வழங்கும் திட்டத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

அத்திட்டத்தின் கீழ் நிகழ்நிலை 14.06.2018 முதல் 13.09.2018 வரை மற்றும் 22.03.2021 முதல் 04.04.2021 வரை காலத்தில் விண்ணப்பித்தவா்கள் உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட நகா் ஊரமைப்பு அலுவலகங்களை அணுகி இசைவு பெற்றுக்கொள்ளலாம். மீண்டும் கல்வி நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இணையதள முகவரியில் விண்ணப்பிக்க 2022 ஜூலை முதல் 6 மாதங்கள் கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் தகுதியுள்ள நபா்கள் அரசாணையில் தெரிவித்துள்ள ஆவணங்களை சமா்ப்பித்து இசைவு பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT