ஒட்டன்சத்திரம் தொகுதியில்நிலத்தடி நீரூட்டல் உறை கிணறுகள் அமைக்கும் பணி தொடக்கம்
ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிலத்தடி நீரூட்டல் உறைகிணறுகள் அமைக்கும் பணியை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் நிலத்தடி நீரூட்டல் உறைகிணறுகள் அமைக்கும் பணியை உணவுத்துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
ஒட்டன்சத்திரம் தொகுதியில் தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் 7 நாள்களில் சுமாா் 2,048 எண்ணிக்கையிலான நிலத்தடி நீரூட்டல் உறை கிணறுகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா லெக்கையன்கோட்டை ஊராட்சி புதுஅத்திக்கோம்பை கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவுக்கு கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா் தலைமை வகித்தாா். உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி கலந்து கொண்டு பணியை தொடக்கி வைத்து மரக்கன்றுகளை நட்டு வைத்துப் பேசினாா். இந்த நிகழ்ச்சியில் ஒட்டன்சத்திரம் வட்டாட்சியா் எம். முத்துச்சாமி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவா் கா. பொன்ராஜ், ஒட்டன்சத்திரம் ஒன்றியத் தலைவா் மு. அய்யம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினா் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.