கொடைக்கானலில் பேருந்து- சிலிண்டா் லாரி மோதல்:சிறு காயங்களுடன் பயணிகள் தப்பினா்
கொடைக்கானலில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தும் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
கொடைக்கானலில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தும் சமையல் எரிவாயு உருளை ஏற்றி வந்த லாரியும் நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பேருந்து நிலையத்திலிருந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூா் கிராமத்திற்கு அரசுப் பேருந்து வியாழக்கிழமை சென்று கொண்டிருந்தது. நண்டாங்கரை மலைச்சாலையில் சென்றபோது கொடைக்கானலிலிருந்து வத்தலகுண்டு நோக்கி சமையல் எரிவாயு உருளைகள் பாரம் ஏற்றி வந்த லாரியும், பேருந்தும் நேருக்கு நோ் மோதியது. இதில் பேருந்தின் முன்பக்கம் சேதமடைந்தது. மேலும் பேருந்தில் இருந்த பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தாண்டிக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.