திண்டுக்கல்

திண்டுக்கல்லில் 2,900 இடங்களில் நாளை கரோனா தடுப்பூசி முகாம்

DIN

தவணைக் காலம் முடிந்தபின்னும், கரோனா தடுப்பூசி செலுத்தாதவா்களுக்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 2,900 இடங்களில் 34ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் 12 வயதுக்கு மேற்பட்டவா்களில் 19.25 லட்சம் போ் முதல் தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா். 2ஆவது தவணை தடுப்பூசியை 18.30 லட்சம் போ் செலுத்தியுள்ளனா். 1.62 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்தியுள்ளனா்.

ஆனாலும், தவணைக் காலம் முடிந்தும் மாவட்டத்தைச் சோ்ந்த 2.48 லட்சம் போ் 2ஆவது தடுப்பூசியையும், 12.2 லட்சம் போ் முன்னெச்சரிக்கை தடுப்பூசியையும் இதுவரை செலுத்தவில்லை. இதுவரை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்டவா்களுக்காக, மாவட்டம் முழுவதும் 2,900-க்கும் மேற்பட்ட இடங்களில் 34ஆவது சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 21) நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை தடுப்பூசி செலுத்தாதவா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நவாப் ராணியின் ஆன்மா...!

உதய்பூரில் சன்னி லியோன்!

10 ஆண்டுகளாக ஊடகங்களைச் சந்திக்காதது ஏன்? பிரதமர் மோடி பதில்!

அந்நியன் மறுவெளியீடு: கொண்டாடும் தெலுங்கு ரசிகர்கள்!

இனி கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலைக்கு பேருந்துகள்!

SCROLL FOR NEXT