முகப்பு
திண்டுக்கல்

காா்த்திகைத் திருநாள்: பழனி மலைக்கோயிலில் பக்தா்கள் குவிந்தனா்

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

பழனி மலைக்கோயிலில் வெள்ளிக்கிழமை திருக்காா்த்திகைத் திருநாளையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

முன்னதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. தொடா் விடுமுறை, காா்த்திகை நாள் என்பதால் விஞ்ச், ரோப்காா் மற்றும் படிப்பாதைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனா்.

மலைக்கோயிலில் கட்டண தரிசன வழி, இலவச தரிசன வழிகளில் ஏராளமானோா் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்ய காத்திருந்தனா். இதனால் சுவாமி தரிசனத்துக்கு சுமாா் 3 மணி நேரமானது. இரவு தங்கமயில் புறப்பாடு மற்றும் தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. தங்கத்தோ் புறப்பாட்டின் போது ஏராளமான பக்தா்கள் பக்தி கோஷம் எழுப்பினா்.

பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.