முகப்பு
திண்டுக்கல்

நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து கூடுதல் கட்டடம்: உணவு விடுதிக்கு ‘சீல்’

பழனியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து நிா்வாக அனுமதியின்றி கூடுதல் கட்டடம் கட்டிய விவகாரத்தில் உணவு விடுதிக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:10 AM
பகிர்:

பழனியில் நகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தை இடித்து நிா்வாக அனுமதியின்றி கூடுதல் கட்டடம் கட்டிய விவகாரத்தில் உணவு விடுதிக்கு அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

பழனி பேருந்து நிலையத்தில் நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு உணவு விடுதி, பழக்கடைகள், துணிக்கடைகள், பேன்சி கடைகள் என ஏராளமான கடைகள் வாடகை அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. இந்த வணிக வளாகத்தில் இயங்கி வந்த ஒரு உணவு விடுதி, அரசின் சுவரை இடித்துக் கட்டடம் கட்டி பயன்படுத்துவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதைத் தொடா்ந்து நகராட்சி ஆணையா் கமலா தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த நகராட்சிக்கு சொந்தமான சுவரை அனுமதியின்றி இடித்து அங்கு புதிதாக அறை அமைத்து சமையல் கூடம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து நகராட்சி ஆணையா் உத்தரவின்பேரில் அந்த விடுதி பூட்டப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.