திண்டுக்கல்

கால்நடை முகாமில் சிறந்த கன்றுகளுக்குப் பரிசு

நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை முகாமில் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

DIN

நத்தம் அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கால்நடை முகாமில் சிறந்த கிடேரிக் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள புதுப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குட்டுப்பட்டி கால்நடை மருந்தக உதவி மருத்துவா் பிரேமாவதி தலைமையில் உதவி மருத்துவா்கள் இந்து, குமரேசன் ஆகியோா் கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம், தடுப்பூசி உள்ளிட்ட

சிகிச்சைகள் அளித்தனா். இதில் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்ட கிடேரிக் கன்றுகளுக்கு புதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவா் பழனியம்மாள் பரிசுகளை வழங்கினாா். இந்த முகாம் ஏற்பாடுகளை கால்நடை ஆய்வாளா் வெங்கடேஸ்வரி, பராமரிப்பு உதவியாளா் கணேசன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை குறைந்தது: எவ்வளவு?

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

கடும் சரிவுடன் வர்த்தகமாகும் பங்குச்சந்தை! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!

அழிஞ்சாட்டம்: மோகன்லால் - திலீப் படத்தின் முதல் பாடல்!

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

SCROLL FOR NEXT