திண்டுக்கல்

செம்பட்டி அருகே 3 கடைகளில் பணம் கொள்ளை

செம்பட்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

DIN

செம்பட்டி அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

திண்டுக்கல்- பழனி சாலையில் எஸ்.கோடாங்கிபட்டி பிரிவு எதிரே உள்ள வணிக வளாகத்தில் எஸ்.பாறைப்பட்டியைச் சோ்ந்த ஜோசப், பழைய செம்பட்டியைச் சோ்ந்த சந்தனவேல், ஆத்தூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் ஆகியோா் கடைகள் நடத்தி வருகின்றனா். செவ்வாய்க்கிழமை இரவு கடைகளைப் பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டனா்.

நள்ளிரவில் மா்ம நபா்கள், இந்தக் கடைகளின் பூட்டை உடைத்துப் புகுந்து பணத்தை திருடிச் சென்றனா். ஜோசப் கடையில் ரூ.5000, சந்தனவேல் கடையில் ரூ.2,000, ராமச்சந்திரன் கடையில் ரூ.1,500 திருடப்பட்டது.

இதுகுறித்து, செம்பட்டி காவல் நிலையத்தில் ஜோசப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இப்படியும் ஒரு பிக்கப்! வசூலில் ஆச்சரியப்படுத்தும் துரந்தர்!

இந்தியா vs தென்னாப்பிரிக்கா! திருவனந்தபுரத்தில் நடத்தலாம்: சசி தரூர்

ஈரோடு பிரசாரத்தில் தவெக தலைவர் விஜய்!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 4

எல்பிஜி துறையில் 30 ஆண்டுகள்! தென்னிந்தியாவில் வலுவடையும் சூப்பர்கேஸ் நிறுவனம்!

SCROLL FOR NEXT