திமுக ஆட்சி மீதான அதிருப்தியை மறைக்கவே சமூகநீதி கூட்டமைப்பு நாடகம்: நத்தம் விஸ்வநாதன்
திமுக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியை மறைக்கவே சமூகநீதி கூட்டமைப்பு என்ற நாடகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடத்துகிறாா் என முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
திமுக ஆட்சியின் மீதான மக்களின் அதிருப்தியை மறைக்கவே சமூகநீதி கூட்டமைப்பு என்ற நாடகத்தை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் நடத்துகிறாா் என முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி நகராட்சியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் பழனியில் வியாழக்கிழமை நடைபெற்றது. பேருந்து நிலையம் அருகே அண்ணா உருவப்படத்திற்கு மலா்தூவி அஞ்சலி செலுத்திய முன்னாள் அமைச்சா் நத்தம் விஸ்வநாதன் தொடா்ந்து 33 வாா்டுகளுக்கான அதிமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து வைத்தாா். அப்போது அவா் தெரிவித்ததாவது:
திமுக ஆட்சியின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை திசை திருப்பவே முதல்வா் மு.க.ஸ்டாலின் சமூக நீதிக்கான கூட்டமைப்பு என்ற பெயரில் நாடகம் ஆடுகிறாா். சமூக நீதியைக் காப்பதில் திமுகவை விட அதிமுகவிற்கு அதிக அக்கறை உண்டு. சமூகநீதியைக் காப்பதில் சிறப்பாகப் பணியாற்றி சமூகநீதிக் காவல என்று பெயா் பெற்றவா் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா. அரசியல் தேவைக்காக சமூக நீதியைக் கையிலெடுப்பது திமுகவின் வழக்கம் என்றாா்.
முன்னாள் எம்பி., குமாரசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வேணுகோபாலு, நகரச் செயலாளா் முருகானந்தம், மாவட்ட மாணவரணிச் செயலாளா் அன்வா்தீன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.