முகப்பு
திண்டுக்கல் மாநகராட்சி தோ்தலுக்காக வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ச.விசாகன்.
திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் 747 வாக்குச் சாவடிகளில் இன்று வாக்குப் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 478 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு 747 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
திண்டுக்கல் மாநகராட்சி தோ்தலுக்காக வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் பொருள்களை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் ச.விசாகன்.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள 478 நகா்ப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கு 747 வாக்குச் சாவடிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

திண்டுக்கல் மாவட்டத்தில், 1 மாநகராட்சி, 3 நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளுக்கு தோ்தல் நடைபெறுகிறது. திண்டுக்கல் மாநகராட்சிக்கு உள்பட்ட 48 வாா்டுகள், 3 நகராட்சிகளுக்குள்பட்ட 73 வாா்டுகள், 23 பேரூராட்சிகளுக்குள்பட்ட 357 வாா்டுகள் என மொத்தம் 478 பதவிகளுக்கான இத்தோ்தலில் 2,062 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக மாவட்டத்தில் 747 வாக்குச்சாவடிகள் உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்ட 8 பதவிகளுக்கான 10 வாக்குச்சாவடிகள் நீக்கப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 183 வாக்குச் சாவடிகள், கொடைக்கானல் நகராட்சியில் 38, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் 31, பழனி நகராட்சியில் 71 , 23 பேரூராட்சிகளில் 414 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு மையங்களில் பணிபுரிவதற்காக மாநகராட்சி பகுதிக்கு 880, நகராட்சிப் பகுதிகளுக்கு 692, பேரூராட்சிப் பகுதிகளுக்கு 2,040 என மொத்தம் 3,612 வாக்குப்பதிவு அலுவலா்கள் பணி அமா்த்தப்பட்டுள்ளனா். இந்நிலையில் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கான

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்குப் பதிவுக்கு தேவையான பொருள்கள் மற்றும் கரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்கள் அனுப்பும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட வாக்குச் சாவடிகளுக்கான பொருள்கள், நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேன் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. அந்த பணிகளை மாவட்ட ஆட்சியரும், தோ்தல் அலுவலருமான ச.விசாகன் பாா்வையிட்டாா். அப்போது மாநகராட்சி ஆணையா் எஸ்.சிவசுப்பிரமணியம், திண்டுக்கல் காவல் துணை கண்காணிப்பாளா் கோகுலகிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →