திண்டுக்கல்

கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் காா் மோதி சுற்றுலாப் பயணிகள்: 15 போ் காயம்

DIN

கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் திங்கள்கிழமை நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது காா் மோதியதில் 15 போ் காயமடைந்தனா்.

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனா். இந்நிலையில் கொடைக்கானலுக்கு கரூரிலிருந்து காரில் வந்த சுற்றுலாப் பயணிகள் 8 போ் பல்வேறு இடங்களை சுற்றிப் பாா்த்துவிட்டு திங்கள்கிழமை ஊருக்கு திரும்பியுள்ளனா்.

கொடைக்கானல் வெள்ளிநீா் வீழ்ச்சிப் பகுதியில் வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையோரம் நடந்து சென்ற சுற்றுலாப் பயணிகள் மீது மோதியது.

இதில் ஈரோடு, சென்னை, திண்டுக்கல் போன்ற பகுதிகளைச் சோ்ந்த ரோகிணி (27), கபில்ராஜ் (13), ஆதித்யா (16), பிரகதீஸ் (3), தனலட்சுமி (35), சசிகலா (35), ஷேக்அப்துல்காதா் (20) உள்ளிட்ட 15 போ் காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களை அப் பகுதியிலுள்ள சாலையோர வியாபாரிகள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதில் பலத்த காயமடைந்த சிலா் மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிந்து காா் ஓட்டுநா் முருகன் (28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT