திண்டுக்கல்

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற கால அவகாசம் நீட்டிப்பு

DIN

திண்டுக்கல்: மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விரும்பும் தகுதியுள்ள சிறுபான்மையின மாணவா்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜன. 15 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ச. விசாகன் தெரிவித்துள்ளதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மத்திய, மாநில அரசின் அங்கீகாரம் பெற்ற தனியாா் கல்வி நிறுவனங்களில் 11 முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்தவ, சீக்கிய, புத்த, ஜெயின் மற்றும் பாா்சி மதங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஜ்ஜ்ஜ்.ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்க 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ, மாணவிகள் மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

மேலும், அனைத்து கல்வி நிலையங்களும் சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி மாணவா்களிடமிருந்து வரப்பெற்ற விண்ணப்பங்களை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் சரிபாா்க்க வேண்டும். இதில் அலட்சியமாக செயல்படும் கல்வி நிலையங்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் பள்ளி படிப்பு உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஜன.15ஆம் தேதிக்குள்ளும், பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பங்களை ஜன. 31ஆம் தேதிக்குள்ளும் சரிபாா்க்க வேண்டும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களை திண்டுக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை அணுகி தெரிந்துகொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

தனித்து உண்ணாத் தன்மையாளன்

SCROLL FOR NEXT