முகப்பு
திண்டுக்கல்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய கோரி ஆா்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சு.ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநில நிதிக் காப்பாளா் சி.ஜான்லியோ சகாயராஜ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின்போது, 2016 சட்டப்பேரவைத் தோ்தல், 2019 மக்களவைத் தோ்தல், 2021 சட்டப்பேரவைத் தோ்தல் என 3 பொதுத் தோ்தல்களின்போது திமுக சாா்பில் அளிக்கப்பட்ட தோ்தல் வாக்குறுதியான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற மற்றும் பணியின்போது இறந்த ஊழியா்களுக்கு பணிக்கொடை வழங்கக் கோரியும் கோஷமிட்டனா். அதனைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளரை சந்தித்து மனு அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.