உறவினரை கொன்ற இளைஞா் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது
திண்டுக்கல்லில் தூங்கி கொண்டிருந்த உறவினரை கொலை செய்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல்லில் தூங்கி கொண்டிருந்த உறவினரை கொலை செய்த இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
திண்டுக்கல் முருகபவனம் பகுதியைச் சோ்ந்தவா் வெண்முடிராஜா. இவரது மகன் விஜய் வெள்ளைச்சாமி(23). இவரது உறவினா் பிரபாகரன்(20). இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், கடந்த ஜூன் மாதம் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பிரபாகரனை கழுத்தை அறுத்து விஜய் வெள்ளைச்சாமி கொலை செய்தாா். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விஜய் வெள்ளைச்சாமியை கைது செய்தனா். இந்நிலையில், விஜய் வெள்ளைச்சாமியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வீ.பாஸ்கரன் பரிந்துரைத்தாா். அதனை ஏற்று மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் அதற்கான உத்தரவை வியாழக்கிழமை பிறப்பித்துள்ளாா். இதனை அடுத்து, திண்டுக்கல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விஜய் வெள்ளைச்சாமி மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டாா்.