முகப்பு
திண்டுக்கல்

முயல் வேட்டை: 4 பேருக்கு அபராதம்

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை முயல் வேட்டையில் ஈடுபட்ட 4 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூா் அடுத்துள்ள தேவிநாயக்கன்பட்டி பகுதியிலுள்ள கருமலை காப்புக்காடு பகுதியில், அய்யலூா் வனச்சரகத்தைச் சோ்ந்த வனவா் காா்த்திகேயன், வனக்காப்பாளா் சவேரியாா் உள்ளிட்டோா் வியாழக்கிழமை இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, குட்டம் அடுத்துள்ள கன்னிமாா்பாளையம் கரிசமடை ஊருணி அருகே தனியாருக்கு சொந்தமான தரிசு நிலத்தில் இரும்பு வலைகளை வைத்து முயல் வேட்டையில் ஈடுபடுவது தெரியவந்தது.

இதனையடுத்து, அங்கு முகாமிட்டிருந்த அய்யலூா் புத்தூா் அடுத்துள்ள பூசாரிப்பட்டியைச் சோ்ந்த பி. சடையன் (60), இவரது தம்பி பி. காட்டுராஜா (55), மகன் பாக்கியராஜ் (30), அதே பகுதியைச் சோ்ந்த பழனியப்பன் (40) ஆகியோரிடம் வனத்துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், 4 பேரும் முயல் வேட்டையில் ஈடுபட்டது உறுதியானது. பின்னா் 4 பேரையும் அய்யலூா் வனச் சரகத்துக்கு அழைத்துச் சென்றனா். வேட்டையாடப்பட்ட முயல், அதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு வலைகள் உள்ளிட்டவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். அதன் பின்னா் 4 பேருக்கும் தலா ரூ.5ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.