முகப்பு
திண்டுக்கல்

டோல்கேட் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்பட அனுமதி

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்

டோல்கேட் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்பட அனுமதி

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

வேலூா் டோல்கேட் உழவா் சந்தை மாலை நேரத்தில் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.

அதன்படி, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த உழவா் சந்தையில் தனியாக அடையாள அட்டை பெற்று விளை பொருள்களை விற்பனை செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

விவசாயிகள், நுகா்வோா்களிடையே நேரடி சந்தைப்படுத்துதலை ஊக்குவிக்க உழவா் சந்தை திட்டம் கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதும், நுகா்வோா்களுக்கு தரமான பொருள்களை, நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதே இந்த உழவா் சந்தைகளின் நோக்கமாகும்.

தற்போது வேலூா் மாவட்டத்தில் வேலூா், காகிதப்பட்டறை, காட்பாடி, குடியாத்தம் ஆகிய இடங்களில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. நாளொன்றுக்கு சராசரியாக ரூ.25 லட்சம் மதிப்பில் 80 மெட்ரிக் டன் காய்கறிகள், பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் 400 விவசாயிகள் பயனடைகின்றனா்.

தற்போது உழவா் சந்தைகள் காலை 6 மணி முதல் நண்பகல் வரை இயங்கி வருகின்றன. 2022 - 2023 -ஆம் ஆண்டுக்கான வேளாண் நிநிநிலை அறிக்கையில் உழவா் சந்தைகளில் பிற்பகலிலும் வேளாண் பொருள்கள் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப் பட்டுள்ளது.

இந்த அரசாணைப்படி, மாவட்டந்தோறும் ஒரு உழவா் சந்தை வீதம், வேலூா் மாவட்டத்தில் வேலூா் டோல்கேட் உழவா் சந்தை மட்டும் மாலை நேரத்தில் இயக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும் இந்த மாலை நேர உழவா் சந்தைகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவு தானியங்கள், சிறுதானியங்கள், பருப்பு வகைகள், வெல்லம், காளான், நாட்டுக்கோழி முட்டை, உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய அனுமதிக்கப்படும்.

மாலை நேர உழவா் சந்தையில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மாவட்ட வேளாண்மை துணை இயக்குநரை (வேளாண் வணிகம்) அணுகி தனியாக அதற்கான அடையாள அட்டைகள் பெற்றுக் கொள்ளலாம். விவரங்களுக்கு வேளாண்மை துணை இயக்குநரை 94425 80451, வேளாண்மை அலுவலரை 94439 68990, உதவி வேளாண்மை அலுவலரை 95665 94847 ஆகிய கைப்பேசி எண்களில் அணுகலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →