முகப்பு
திண்டுக்கல்

பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் விளையாட்டு விழா

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் 52 ஆவது ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பழனி சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விளையாட்டு விழாவில், தேசிய அளவில் விருது பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கிய பழனிக்கோயில் இணை ஆணையா் நடராஜன். உ
பகிர்:

பழனியை அடுத்த சின்னக்கலையமுத்தூா் அருள்மிகு பழனியாண்டவா் மகளிா் கல்லூரியில் 52 ஆவது ஆண்டு விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கல்லூரி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு பழனிக் கோயில் இணை ஆணையரும், கல்லூரி தாளாளருமான நடராஜன் தலைமை வகித்தாா். பழனி கோயில் துணை ஆணையரும், கல்லூரிச் செயலருமான பிரகாஷ் முன்னிலை வகித்தாா். கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி வரவேற்றாா். நிகழ்ச்சியில், முதலாவதாக நடைபெற்ற தேசிய மாணவா் படை, நலப்பணித்திட்ட படையினரின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினா்கள் ஏற்றுக்கொண்டு உரை நிகழ்த்தினா்.

இதில், இணை ஆணையா் நடராஜன் பேசியது: கல்லூரியின் விளையாட்டு வீராங்கனைகளுக்கான சத்தான உணவிற்காக ஆண்டுக்கு ரூ. 1 லட்சம், கல்லூரி நிா்வாகத்தின் சாா்பாக வழங்கப்படும். மேலும் வரும் கல்வியாண்டில் புதிதாக 5 முதுகலை வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. அதே போல், புதிதாக 28 வகுப்பறைகள் கொண்ட இரண்டு மாடி கட்டடம் கட்டும் பணி தொடங்க உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் கல்லூரியில் பயிலும் மாணவிகள் அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கப்பட உள்ளது என்றாா்.

தொடா்ந்து தடகளப் போட்டிகள், கலைநிகழ்ச்சிகள், பரிசு வழங்குதல் நடைபெற்றது. வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசு வழங்கினா். தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பெற்ற மூன்று மாணவிகளுக்கு கல்லூரி நிா்வாகத்தின் சாா்பில் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில அளவில் சாதனைப் படைத்த வீராங்கனைகளுக்கும் கோப்பைகள், பரிசுகள் வழங்கிப்பட்டன. இளங்கலை இரண்டாம் ஆண்டு வணிகவியல் துறை மாணவி ரோகினி தனிநபா் சாம்பியன் பட்டம் பெற்றாா். உடற்கல்வி இயக்குநரும், தேசிய மாணவா் படை அதிகாரியுமான கலையரசி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.