முகப்பு
திண்டுக்கல்

உலக சுற்றுச்சூழல் தினம்

பழனி- கொடைக்கானல் சாலையில் மலைச்சாலை தொடங்கும் இடத்தில் வனத்துறை மற்றும் தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் சுற்றுச்சூழல் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பழனி- கொடைக்கானல் சாலையில் மலைச்சாலை தொடங்கும் இடத்தில் வனத்துறை மற்றும் தன்னாா்வ அமைப்புகள் சாா்பில் சுற்றுச்சூழல் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வனத்துறை, அன்னை பாரா மெடிக்கல் மற்றும் பழனி அரிமா சங்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியையொட்டி நெகிழி ஒழிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட்டு கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப்பயணிகளுக்கு மஞ்சள் பைகள் வழங்கப்பட்டு நெகிழிப் பைகள் திரும்ப பெறப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பழனி வனச்சரகா் பழனிக்குமாா், சித்த மருத்துவா் மகேந்திரன், பழனி அரிமா சங்க வட்டாரத் தலைவா் அசோக், அன்னை பாராமெடிக்கல் ரவி மற்றும் வனப்பணியாளா்கள், அரிமா உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து தேக்கன்தோட்டம் முதல் புதுப்பாலம் வரை பழனி- கொடைக்கானல் மலைச்சாலையில் சுமாா் 100 கிலோ நெகிழிகள் அகற்றப்பட்டு வனப்பகுதி சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.