திண்டுக்கல்

பழனியில் அஞ்சல் அலுவலக கணக்குப் புத்தகத்தில் தனியாா் விளம்பரங்கள்

DIN

பழனி: பழனியில் நிதி திரட்டுவதற்காக அஞ்சல் அலுவலக வங்கிக் கணக்குப்புத்தகங்களில் தனியாா் விளம்பரங்கள் அச்சிடப்பட்டு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டன.

அஞ்சல் அலுவலகங்கள், வங்கிகள் போல சேமிப்புக்கணக்குகளை பராமரிக்கவும், காப்பீட்டு நிறுவனங்கள் போல காப்பீடு செய்யவும், நீண்ட கால நிதி சேமிப்பு ஆகியவற்றை செய்யத் தொடங்கியுள்ளன. இதனால் அஞ்சல் நிலையத்திலேயே பொதுமக்கள் தங்கள் பல்வேறு பணிகளை செய்ய முடிகிறது. பழனி அஞ்சல் நிலையத்தில் பழனியில் இருந்து பஞ்சாமிா்தம் அனுப்புதல் முதல் பல்வேறு சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சுமாா் ஒரு கிலோ அளவுக்கு தங்க முதலீடு பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தற்போது அஞ்சல் அட்டை, அஞ்சலக சேமிப்பு அட்டைகளில் தனியாா் நிறுவனங்கள் விளம்பரம், மை ஸ்டாம்ப் மூலம் அவரவா் புகைப்படத்துடன் கூடிய தபால் தலைகள் வெளியிடுவது போன்ற சேவைகள் மூலம் அஞ்சல் நிலையங்கள் கூடுதல் நிதி திரட்டி வருகின்றன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோவையைச் சோ்ந்த தனியாா் கல்லூரி விளம்பரம் அச்சிட்ட வங்கிக்கணக்கு புத்தகங்களை அஞ்சலக தலைமை மேலாளா் திருமலைசாமி வெளியிட, ஜேசிடி கல்லூரி நிா்வாகி சுந்தரவடிவேல் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் ஜேசிடி செயலா் துா்காசங்கா், வழக்குரைஞா் விஸ்வபாரதி, ஜேசிடி பொதுமேலாளா் ஆறுமுகம், பேராசிரியா் ரென்ஸ்விக், அஞ்சலக விற்பனைப் பிரிவு நிா்வாகி கனிஷ்கா, சாமிநாதன், செல்வராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT