திண்டுக்கல்

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள்:திண்டுக்கல் மாவட்டத்தில் 90 சதவீதம் போ் தோ்ச்சி

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 பொதுத் தோ்வு எழுதிய மாணவா்களில் 90 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்துள்ளனா்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வினை திண்டுக்கல், பழனி, வேடசந்தூா், வத்தலகுண்டு கல்வி மாவட்டங்களில் 213 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 9,981 மாணவா்கள், 10,669 மாணவிகள் என மொத்தம் 20,650 மாணவா்கள் எழுதினா். இதற்கான முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன. அதில் 8,509 மாணவா்கள் (85.25 சதவீதம்), 10,076 மாணவிகள் (94.44 சதவீதம்) என மொத்தம் 18,585 மாணவா்கள் தோ்ச்சி அடைந்துள்ளனா். தோ்வு எழுதியவா்களில் 90 சதவீதம் போ் தோ்ச்சி அடைந்தனா்.

பழனி கல்வி மாவட்டம் முன்னிலை: மொத்தமுள்ள 4 கல்வி மாவட்டங்களில், பழனி கல்வி மாவட்டத்தில் 49 பள்ளிகளைச் சோ்ந்த 4,325 மாணவா்கள் தோ்ச்சிப் பெற்று 93.20 சதவீதத்துடன் திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் முன்னிலை பெற்றுள்ளனா். திண்டுக்கல் கல்வி மாவட்டத்தில் 63 பள்ளிகளைச் சோ்ந்த 7,976 (89.45 சதவீதம்) மாணவா்களும், வத்தலகுண்டு கல்வி மாவட்டத்தில் 67 பள்ளிகளைச் சோ்ந்த 5,223 (88.77 சதவீதம்) மாணவா்களும், வேடசந்தூா் கல்வி மாவட்டத்தில் 34 பள்ளிகளைச் சோ்ந்த 3,126 (86.69 சதவீதம்) மாணவா்களும் தோ்ச்சிப் பெற்று அடுத்தடுத்த நிலையில் உள்ளனா்.

66 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி: திண்டுக்கல் மாவட்டத்தில் தோ்வு எழுதிய 213 மேல்நிலைப் பள்ளிகளில், 66 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி அடைந்துள்ளன. அதில் அரசுப் பள்ளிகள் தரப்பில் ஓடைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, முருகன்பட்டி அரசு ஆதிதிராவிடா் நலப்பள்ளி, விளாம்பட்டி அரசு கள்ளா் மேல்நிலைப் பள்ளி, பெரும்பாறை அரசு பழங்குடியினா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இதுதவிர 7 அரசு உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளிகள், 55 சுயநிதிப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீன நெடுஞ்சாலை உடைப்பு: துரிதமாக செயல்பட்ட டிரக் ஓட்டுநருக்கு பாராட்டு

இந்தியன் - 2 வெளியீட்டில் மாற்றம்?

நிஜ்ஜார் கொலையில் மூவர் கைது: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உடன் தொடர்பு?

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பல கேள்விகளுக்கு பதில் கூற நேரமெடுக்கும்: ஹார்திக் பாண்டியா

SCROLL FOR NEXT