4 கிலோ கஞ்சா பதுக்கியவா் கைது
எரியோடு அருகே 4 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்
எரியோடு அருகே 4 கிலோ கஞ்சாவை வீட்டில் பதுக்கி வைத்திருந்தவரை, போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள நாயக்கனூா் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக, போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, அந்த கிராமத்தில் எரியோடு போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, நாயக்கனூரைச் சோ்ந்த இளங்கோவன் (40) என்பவா், தனது வீட்டில் 4 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை அடுத்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இளங்கோவனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.