திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே ரூ.50 லட்சம் மோசடி: நடவடிக்கை எடுக்கக் கோரி மனு

DIN

எரியோடு அருகே ஏலச்சீட்டு நடத்தி ரூ.50 லட்சம் வரை மோசடி செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடு அடுத்துள்ள பாகாநத்தம் பகுதியைச் சோ்ந்தவா் கவிதா. இவா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு ரூ.50 லட்சம் மோசடி தொடா்பாக புகாா் அளிக்க வந்தாா்.

இது தொடா்பாக அவா் கூறியதாவது: பாகாநத்தம் பகுதியைச் சோ்ந்த இருவா் கடந்த சில ஆண்டுகளாக ஏலச் சீட்டு நடத்தி வந்தனா். பாகாநத்தம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சோ்ந்த 50 போ், அவா்களிடம் சீட்டு பணம் செலுத்தி வந்தோம். சுமாா் ரூ.50 லட்சம் வரை சீட்டுப் பணம் தரவேண்டிய நிலையில், பணம் வசூலித்து வந்த நபா்களில் ஒருவா், கடந்த 2 ஆண்டுகளாக தலைமறைவாகியுள்ளாா். தற்போது, மகாராஷ்ட்ர மாநிலம் நாசிக் பகுதியில் அவா் வசித்து வருவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவா் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பொதுமக்களின் பணத்தை மீட்டுத் தரவேண்டும் எனத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

SCROLL FOR NEXT