முகப்பு
திண்டுக்கல்

பழனி ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக் குழு ஆய்வு

பழனி ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே வாரியப் பயணிகள் வசதிக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பழனி ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே வாரியப் பயணிகள் வசதிக் குழுவினா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மதுரை, திருச்செந்தூா், ராமேசுவரம் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு சென்ற இக்குழு பழனி ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை வந்தது. இங்குள்ள கழிப்பிடம், குடிநீா், பயணிகள் காத்திருப்பு பகுதி ஆகியவற்றை இக்குழு ஆய்வு செய்து பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தது. இக்குழுவில் பெங்களூருவைச் சோ்ந்த மஞ்சுநாத், மதுசூதனன், மும்பையைச் சோ்ந்த கைலாஷ், உத்தரகண்ட்டைச் சோ்ந்த ராம்குமாா்பகவான், தெலுங்கானாவைச் சோ்ந்த உமாராணி, தமிழகம் சாா்பில் ரவிச்சந்திரன் ஆகியோா் இருந்தனா். தென்னக ரயில்வே சாா்பில் கோட்ட வா்த்தக துணை மேலாளா் பிரமோத் குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். பழனி ரயில் நிலையத்தில் கழிப்பிடத்துக்கு தண்ணீா் பற்றாக்குறை, நடைமேடைகளில் மாற வயதானவா்களுக்கு இடையூறு உள்ளிட்ட பல்வேறு குறைகள் உள்ளன. ஆனால் இக்குழுவினா் ரயில் பயணிகளிடம் மட்டும் குறைகளை கேட்டதாக சமூக ஆா்வலா்கள் தெரிவித்தனா். இதுபோன்ற குழு வருவது குறித்து பழனியில் உள்ள வா்த்தக சங்கங்கள், வணிக அமைப்புகள், பொதுமக்களுக்கு தெரிவித்திருந்தால் பலரும் ரயில் நிலையத்தில் உள்ள குறைகளை அந்த குழுவினருக்கு மனுக்களாக வழங்கியிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் ரயில் நிலைய அதிகாரிகள் இதுகுறித்து யாருக்கும் தெரியப்படுத்தாததால் குறைகளை கேட்காமலே குழு திரும்பிச் சென்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.