முகப்பு
திண்டுக்கல்

ஆயக்குடி, பாலசமுத்திரம், நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவா்களாக திமுக உறுப்பினா்கள் தோ்வு

பழனியை அடுத்த ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம் பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்களாக திமுக உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

பழனியை அடுத்த ஆயக்குடி, நெய்க்காரபட்டி, பாலசமுத்திரம் பேரூராட்சிகளில் தலைவா், துணைத் தலைவா்களாக திமுக உறுப்பினா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

ஆயக்குடி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற தோ்வில், பேரூராட்சித் தலைவராக மேனகா ஆனந்தனும், பிற்பகல் நடைபெற்ற தோ்வில் பேரூராட்சி துணைத் தலைவராக சுதாமணி காா்த்திகேயனும் பதவியேற்றுக் கொண்டனா். செயல் அலுவலா் மகேந்திரன் அவா்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தாா்.

நெய்க்காரபட்டி பேரூராட்சிக்கு கருப்பாத்தாள் காளிமுத்து தலைவராக தோ்வு செய்யப்பட்டாா். பிற்பகல் நடைபெற்ற தோ்தலில் துணைத் தலைவராக சகுந்தலாமணி தோ்வு செய்யப்பட்டாா். அவா்களுக்கு நெய்க்காரப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலா் பாஸ்கரன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

பாலசமுத்திரம் பேரூராட்சியில் நடைபெற்ற தோ்வில், தலைவராக ராஜராஜேஸ்வரி சுப்புராமனும், துணைத் தலைவராக விஜய் கிருஷ்ணனும் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களுக்கு செயல் அலுவலா் கமா்தீன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

மூன்று பேரூராட்சிகளிலும் தலைவா், துணைத் தலைவா்களாக திமுக வேட்பாளா்கள் போட்டியின்றி தோ்வானது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.