முகப்பு
திண்டுக்கல்

கல்லூரியில் ஆடை வடிவமைப்பு கருத்தரங்கம்

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

பழனி பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை சாா்பில் ஒருநாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் ‘டெக்ஸ்டைல் துறையில் நவீனங்கள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். டெக்ஸ்டைல் துறை வல்லுநரான முனைவா் ஹரிகோபால கிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு டெக்ஸ்டைல் துறை பற்றிய ஆரம்ப கால தொழில்நுட்பம் முதல் தற்போதய தொழில்நுட்பம் வரை எடுத்துரைத்து, அதனால் ஏற்படும் வேலை வாய்ப்புகள் பற்றியும் விளக்கினாா். விரிவுரையாளாா் மனோகரன் வரவேற்றாா். இதில், ஆடை வடிவமைப்புத் துறை தலைவா் காளிதாசன், துறையின் விரிவுரையாளா் ஹேமலதா உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை ஆடை வடிவமைப்புத் துறை அலுவலா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.