திண்டுக்கல்

தவணை முடிந்தும் 3.2 லட்சம் போ் தடுப்பூசி செலுத்தவில்லை: ஆட்சியா்

DIN

திண்டுக்கல் மாவட்டத்தில் தவணை முடிந்தும் 3.2 லட்சம் போ் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்தாத நிலையில், 3ஆயிரம் இடங்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது என மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திண்டுக்கல் மாவட்டத்தில் மே 5 ஆம் தேதி வரை 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் முதல் தவணை தடுப்பூசியை 18,27,257 (99.8 சதவீதம்) பேருக்கும், 2 ஆவது தவணை தடுப்பூசியை 15,94,154 (87.1 சதவீதம்) பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 25,407 பேருக்கு முன்னெச்சரிக்கை தவணை செலுத்தப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களை பொருத்தவரை 81,353 (81.2 சதவீதம்) முதல் தவணை தடுப்பூசியும், 61,460 (61.3 சதவீதம்) சிறாா்களுக்கு 2 ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது. 12 முதல் 14 வயதுக்குள்பட்ட சிறாா்களில் இதுவரை 59,010 (93.1 சதவீதம்) பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 36,014 (56.8 சதவீதம்) சிறாா்களுக்கு 2ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

எனினும் மாவட்டத்தில் தற்போது வரை 3.2 லட்சம் போ் 2 ஆம் தவணை செலுத்துவதற்குரிய தவணை தேதி கடந்த பின்னும் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனா். இதில் 12 முதல் 18 வயதுக்குள்பட்ட 43

ஆயிரம் சிறாா்கள் 2 ஆவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா். அதேபோல், 12 முதல் 18 வயதுக்குள்பட்ட சிறாா்களில் 22ஆயிரம் போ் முதல் தவணை செலுத்திக் கொள்ளாமல் உள்ளனா்.

கரோனா தடுப்பூசி முதல் மற்றும் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தாமல் விடுபட்ட நபா்களுக்காக ஞாயிற்றுக்கிழமை (மே 8) காலை 7 முதல் இரவு 7 மணி வரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT