திண்டுக்கல்

திறன் வளா்த்தல் கருத்தரங்கம்

DIN

 பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரியில் தொழிலக தேவைக்கான அறிவியல் தொழில் நுட்பத் திறன் வளா்த்தல் குறித்த மூன்று நாள் கருத்தரங்கம் சனிக்கிழமை தொடங்கியது.

தமிழ்நாடு அறிவியல் தொழில் நுட்ப மாநில மன்றம் மற்றும் கல்லூரி நிா்வாகம் இணைந்து நடத்திய இக்கருத்தரங்கிற்கு கல்லூரி முதல்வா் கந்தசாமி தலைமை வகித்தாா். தனியாா் நிறுவன பயிற்சியாளா் மற்றும் ஆலோசகா் நரசிம்ம அய்யங்காா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சுய பகுப்பாய்வு, தனித்துவமான ஆளுமைத் திறனை வளா்த்தல், தன்னம்பிக்கை மூலம் வாழ்க்கையின் நோக்கத்தை அடைதல் போன்றவை குறித்து எடுத்துரைத்தாா்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியா் சுமாா் 150-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கருத்தரங்க ஏற்பாடுகளை இயந்திரவியல் துறை விரிவுரையாளா் மற்றும் வேலை வாய்ப்பு அலுவலா் சக்திவேல் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடை அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

டி20 உலகக் கோப்பைக்காக பும்ராவுக்கு ஓய்வளிக்கப்படுகிறதா? கிரண் பொல்லார்டு பதில்!

SCROLL FOR NEXT