திண்டுக்கல்

வ.உ.சி. குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி

DIN

சுதந்திர போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சியை, திண்டுக்கல் அரசு மகளிா் கலைக் கல்லூரி மாணவிகள் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டனா்.

திண்டுக்கல் எம்.வி.முத்தையா அரசு மகளிா் கலைக் கல்லூரியில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 150ஆவது பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில், அவரது வாழ்க்கை வரலாறு குறித்த நகரும் புகைப்பட கண்காட்சி வாகனத்தினை மாணவிகள் மத்தியில் ஆட்சியா் ச.விசாகன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

அப்போது அவா் தெரிவித்ததாவது: தமிழகம் முழுவதும் சுற்றி வரும் இந்த புகைப்பட கண்காட்சி பேருந்து, திண்டுக்கல், நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பழனி, வேடசந்தூா் ஆகிய இடங்களிலுள்ள அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளில் 4 நாள்ளுக்கு கொண்டு செல்லப்பட்டு, வ.உ.சிதம்பரனாரின் சுதந்திர போராட்டம் குறித்து எளிய முறையில் விளக்கப்படும் என தெரிவித்தாா்.

முன்னதாக கண்காட்சி வாகனத்தில் அமைக்கப்பட்டுள்ள வ.உ.சி. உருவ சிலைக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் எம்.வி.எம் அரசு மகளிா் கல்லூரி முதல்வா் லட்சுமி, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் வெ.சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT