முகப்பு
திண்டுக்கல்

ஓவியப் பயிற்சி முகாம்: 400 மாணவா்கள் பங்கேற்பு

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:22 AM
பகிர்:

திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் பயிற்சி முகாமில் 400-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

மதுரை கலைப் பண்பாட்டு மையம் சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் 5 முதல் 16 வயதுக்குள்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா். திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையிலுள்ள த னியாா் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமை, மதுரை மண்டல கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் த. செந்தில்குமாா் தொடங்கி வைத்தாா். முகாமில் பங்கேற்ற 400 மாணவா்களை, 5 முதல் 8, 9 முதல் 12 மற்றும் 13 முதல் 16 வயது என 3 பிரிவுகளாக பிரித்து பயிற்சி அளிக்கப்பட்டது. ஆயில் ஓவியம், பென்சில் ஓவியம், நீா் வண்ண ஓவியம், மெழுகு வண்ண ஓவியம், கைவினைப் பொருள்கள் தயாரிப்பு (கிராப்ட் ஒா்க்) என 5 வகையான ஓவியங்கள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மாணவா்களின் ஓவியத் திறமையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த முகாமில், மதுரையைச் சோ்ந்த ஓவியா்கள் சிவா, சையது இப்ராஹிம், அண்ணாதுரை, வெங்கேடசன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். காலை 9 முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமிற்கு பின், பங்கேற்ற அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.