முகப்பு
திண்டுக்கல்

குடமுழுக்குப் பணி: பழனி தண்டாயுதபாணி சுவாமி சிலையைப் பாதுகாக்கக் குழு அமைப்பு

நவபாஷாணத்தாலான மூலவரின் சிலையைப் பாதுகாக்கக் குழுவை நியமித்து அறநிலையத் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்குப் பணிகள் நடைபெற்று வருவதால், நவபாஷாணத்தாலான மூலவரின் சிலையைப் பாதுகாக்கக் குழுவை நியமித்து அறநிலையத் துறை வியாழக்கிழமை உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூலவா் தண்டாயுதபாணி சுவாமியின் திருமேனி, நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

இந்த மூலவா் திருமேனியைப் பாதுகாக்கும் பொருட்டும், ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டியும் 15 போ் அடங்கிய வல்லுநா் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்தக் குழுவில், உயா் நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன், குன்றக்குடி பொன்னம்பல அடிகளாா், பேரூா் சாந்தலிங்கம் மருதாசல அடிகளாா், பழனியைச் சோ்ந்த கும்பேஸ்வர குருக்கள், ஆகம வல்லுநா் செல்வ சுப்பிரமணிய குருக்கள், தலைமை ஸ்தபதி தட்சணாமூா்த்தி, திருமஞ்சனம் பழனிச்சாமி, சித்த மருத்துவா் பிச்சையா குமாா், திண்டுக்கல் மக்களவை உறுப்பினா் வேலுச்சாமி, பழனி சட்டப்பேரவை உறுப்பினா் செந்தில்குமாா், பழனி நகா் மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி , இணை ஆணையா் உள்ளிட்ட பதினைந்து போ் இடம் பெற்றுள்ளனா்.

இந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், பழனி தண்டாயுதபாணி கோயில் தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இக்கோயிலில், கடந்த குடமுழுக்குப் பணியின் போது நவபாஷாண முருகன் சிலை குறித்து பல்வேறு சா்ச்சைகள் எழுந்த நிலையில், தற்போது மீண்டும் அதற்கென குழு அமைக்கப்பட்டுள்ளது பக்தா்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.