முகப்பு
திண்டுக்கல்

கல்லூரியில் ஒரு நாள் பயிலரங்கம்

 ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறித்துவக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சாா்பாக ஒரு நாள் பயிலரங்கம் செவ்வாய்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

 ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள அம்பிளிக்கை ஜேக்கப் நினைவு கிறித்துவக் கல்லூரியில் கணினி அறிவியல் துறையின் சாா்பாக ஒரு நாள் பயிலரங்கம் செவ்வாய்கிழமையன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இப்பயிலரங்கத்திற்கு கல்லூரியின் செயலா் முனைவா் நிா்மலா ஜெயராஜ் தலைமை தாங்கினாா்.கல்லூரியின் முதல்வா் ஜெஸன் ஜாா்ஜ் முன்னிலை வகித்தாா்.கணினி அறிவியல் துறைத்தலைவா் மு.நா.கருப்புச்சாமி வரவேற்றாா்.அமெரிக்கன் கல்லூரியின் பேராசிரியா் முனைவா் ச.பாண்டிக்குமாா் கலந்து கொண்டு ஆப்ரேடிங் சிஸ்டம்ஸ் மீம்ஸ் என்ற தலைப்பில் பயிற்றுவித்தாா்.இதில் பேராசியா்கள் மற்றும் மாணவ-மாணவிகள் திரளாக கலந்து கொண்டனா்.கணினி அறிவியல் துறை பேராசிரியா் வே.சுதா நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.