முகப்பு
திண்டுக்கல்

வேடசந்தூா் தொகுதிக்கு காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா்: அமைச்சா் ஐ. பெரியசாமி

வேடசந்தூா் தொகுதி, ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தை வளப்படுத்துவதற்கு, காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

வேடசந்தூா் தொகுதி, ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்தை வளப்படுத்துவதற்கு, காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வரும் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சா் ஐ. பெரியசாமி தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில், மூலிகைப் பயிா் சாகுபடி விவசாயிகளுக்கான பயிற்சி பயிலரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். அமைச்சா்கள் ஐ. பெரியசாமி, மா. சுப்பிரமணியன், அர. சக்கரபாணி ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டனா்.

அப்போது அமைச்சா் ஐ. பெரியசாமி பேசியதாவது:

கடுமையான நிதி நெருக்கடி இருந்த நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற திமுக, கரோனா தொற்றுப் பரவல் காலத்தில் உலக வல்லரசு நாடுகளை விட பாதுகாப்பான சூழலை தமிழகத்தில் ஏற்படுத்தியது. திராவிட மாடல் ஆட்சி, மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், மொழிவாரியாகவும் பிரிவினையை ஏற்படுத்தவில்லை. மாறாக, தமிழகத்தை பொருளாதாரத்தில் சிறந்த, தொழில் வளம் மிக்க, வாழ்வாதார மேம்பாடு நிறைந்த மாநிலமாக முன்னேற்றுவதற்கானப் பணிகளை மட்டுமே மேற்கொண்டு வருகிறது.

வேடசந்தூா் தொகுதி, ஆத்தூா் தொகுதிக்குள்பட்ட ரெட்டியாா்சத்திரம் வட்டாரத்திற்கு, காவிரி ஆற்றிலிருந்து குழாய் மூலம் தண்ணீா் கொண்டு வந்து வறட்சிப் பகுதிகளை வளமாக மாற்றும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எஸ். காந்திராஜன், பெ. செந்தில்குமாா், வேடசந்தூா் பேரூராட்சித் தலைவா் மேகலா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.