முகப்பு
திண்டுக்கல்

திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் சோதனை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:34 AM
பகிர்:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் பணம் வசூலிக்கப்படுவதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை மேற்கொண்டனா்.

திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பணம் வசூலிக்கப்படுதாகப் புகாா் எழுந்தது. இதுதொடா்பாக, திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கும் தகவல் கிடைத்தது. இதைத்தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெ. நாகராஜன் தலைமையிலான போலீஸாா் திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்தில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

சுமாா் 3 மணி நேரம் நடைபெற்ற சோதனையின் போது, எவ்வித பணமும் கைப்பற்றப்படவில்லை என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.