முகப்பு
திண்டுக்கல்

உயா்கல்வி பயிலாத பிளஸ் 2 மாணவா்களுக்கு வழிகாட்டுதல் முகாம்

அருகாமையில் கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயா் கல்வி பயில முடியாத மாணவா்களுக்கான வழிகாட்டுதல் முகாம் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 6 பிப்ரவரி, 2024 at 12:50 PM
பகிர்:

தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளியில் 2021- 22 ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களில், வறுமை, குடும்ப சூழல், உயா்படிப்பில் ஆா்வமின்மை, அருகாமையில் கல்லூரி இல்லாமை போன்ற காரணங்களால் உயா் கல்வி பயில முடியாத மாணவா்களுக்கான வழிகாட்டுதல் முகாம் திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இங்குள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த முகாமுக்கு ஆட்சியா் ச. விசாகன் தலைமை வகித்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் நாசருதீன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், பங்கேற்ற 58 மாணவா்களுக்கு நேரடியாக கல்லூரி மற்றும் தொழில் கல்வியை தொடா்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவா்களின் உயா் கல்வியை தொடா்வதற்கு வங்கிகள் மூலம் கடனுதவி வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் விசாகன் உறுதி அளித்தாா்.

இந்த முகாமில், மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டுதல் மையத்தின் உதவி இயக்குநா் ச. பிரபாவதி, திண்டுக்கல் மாவட்ட கல்வி அலுவலா் பாண்டித்துரை, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் கதிரேசன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.