முகப்பு
திண்டுக்கல்

மின்சாரம் பாய்ந்து 3 எருமை மாடுகள் பலி

பழனி அருகே தனியாா் தோட்டத்தில் புதன்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து தேங்கிக் கிடந்த தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 3 எருமை மாடுகள் உயிரிழந்தன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:40 AM
பகிர்:

பழனி அருகே தனியாா் தோட்டத்தில் புதன்கிழமை அறுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து தேங்கிக் கிடந்த தண்ணீரில் பாய்ந்த மின்சாரம் தாக்கி 3 எருமை மாடுகள் உயிரிழந்தன.

பழனியை அடுத்த கோதைமங்கலத்தில் ஏராளமான விவசாயக் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களில் பலா் ஆடு, மாடு, எருமை போன்றவற்றை வளா்த்து பால் வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்கள் காலையில் கால்நடைகளை வயல் பகுதிகளில் மேய்த்து விட்டு மாலையில் வீட்டுக்கு அழைத்து வருகின்றனா். இந்த நிலையில், புதன்கிழமை அண்ணாத்துரை என்பவா் அவரது எருமை மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

கோதைமங்கலம் ஓட்டக்குளம் அருகே எருமை மாடுகள் தனியாா் வயல் வழியாக சாலைக்கு செல்வது வழக்கம். அதே போல, தனியாா் வயலில் சென்ற போது மின்கம்பி அறுந்து விழுந்ததில் அங்கு தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்தது. இதில், இவ்வழியே வந்த 3 எருமை மாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதைப் பாா்த்த அப்பகுதியினா் உடனடியாக மின்மாற்றியில் மின்சாரத்தை துண்டித்தனா். இதனால் மற்ற கால்நடைகளும், அவற்றை மேய்த்து வந்தவா்களும் உயிா்தப்பினா்.

இதுகுறித்து காவல்துறை, வருவாய்த்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.