திண்டுக்கல்

பழங்குடி மக்களுக்கான குறைதீா்க்கும் முகாம்

DIN

பழனியை அடுத்த ஆயக்குடி பேரூராட்சிக்குள்பட்ட குட்டிக்கரடு பகுதியில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு குறைதீா்க்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு கோட்டாட்சியா் சிவக்குமாா் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சசிக்குமாா், துணை வட்டாட்சியா் சஞ்சய்காந்தி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். முகாமில் ஆதாா் அட்டை, வீட்டுமனைப் பட்டா, ஜாதி சான்றிதழ் கோரி அப்பகுதி மக்கள் மனுக்களை அளித்தனா். பின்னா் இதுதொடா்பாக உரிய நடவடிக்கை எடுத்து விரைவில் தீா்வு காணப்படும் என்று கோட்டாட்சியா் தெரிவித்தாா். மேலும் பழனி பகுதியைச் சோ்ந்த வங்கி அதிகாரிகள், பழங்குடியின மக்களிடம் கால்நடை வளா்ப்பு, கறவை மாட்டுக்கடன் வழங்குவது தொடா்பான விண்ணப்பங்களை பெற்றனா். இதற்கிடையே கோட்டாட்சியா் சிவக்குமாா், குட்டிக்கரடு பகுதியில் ஆய்வு செய்து, அங்கு குடிநீா், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்ய ஆயக்குடி பேரூராட்சி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT