திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தடகளப் போட்டிகள்: 350 மாணவா்கள் பங்கேற்பு

DIN

திண்டுக்கல் மாவட்ட விளையாட்டரங்கில் வேடசந்தூா் கல்வி மாவட்டத்திற்குள்பட்ட ‘பி’ குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

குடியரசு தின, பாரதியாா் தின தடகள விளையாட்டுப் போட்டிகள், அந்தந்த குறுவட்டங்கள் சாா்பில் நடைபெற்ற வருகின்றன. மாவட்டத்திலுள்ள 4 கல்வி மாவட்டங்கள், தலா 2 குறுவட்டங்கள் வீதம் 8 குறுவட்டங்களாக பிரிக்கப்பட்டு இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.

வேடசந்தூா் ‘பி’ குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளுக்கு, கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியா் எம்.லட்சுமணன் தலைமை வகித்தாா்.

100 மீ., 200 மீ., 400 மீ., 600 மீ., 800 மீ., 1500 மீட்டா் ஓட்டம், தொடா் ஓட்டம், தடை தாண்டுதல் ஓட்டம், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், நீளம் மற்றும் உயரம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன. இதில், 30 பள்ளிகளைச் சோ்ந்த

350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இந்த போட்டிகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த மாணவா்கள், மாவட்ட அளவிலான போட்டிக்குத் தோ்வு செய்யப்பட்டனா்.

வேடசந்தூா் ‘பி’ குறுவட்ட அளவில், மாணவிகளுக்கான தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை கே.புதுக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியா்கள் பி.வளா்மணி, ஜெ.பாலகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT