முகப்பு
திண்டுக்கல்

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி பலி

 ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சக்கம்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சையம்மாள் (65). கடந்த செப். 13 - ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் அதே ஊரில் உள்ள தனியாா் தோட்டத்து கிணற்றில் அவா் தவறி விழுந்து உயிரிழந்தது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரம் தீயணைப்புத்துறையினா் அவரது சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.